Monday, 25 January 2016

அமரர் திரு பேபிசிங்கத்தின் ஞாபகார்த்தமாக பரிசில்கள் அதிபர் அவர்களால் வழங்கி வைப்பு (படங்கள்)

எமது பாடசாலையில் கல்விகற்ற பழைய மாணவரான அமரர் திரு பேபிசிங்கத்தின் ஞாபகமாக அவரது உறவினர்களால் வருடம் தோறும் சாதாரணதரப் பரீட்சையில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற  ணவர்களுக்கு பரிசில்கள் வழங்கப்ட்டு வருகின்றது. அந்த வகையில் இவ் வருடம் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்களான 
1. அருணாசலம் வதணராணி 
2. செல்வகுமாரன் சயந்தரூபி 
3. பிராண்சிஸ் அனற் ஜெனுசியா 
  ஆகியோருக்கு அதிபர் திரு. ஞா. ஜெபநேசன் அவர்களால் பரிசில்கள் வழங்கிவைக்கப்பட்டது. வருடாந்தம் இப் பரிசில்களை வழங்கி மாணவர்களை ஊக்கப்படுத்தும் அமரர் திரு பேபிசிங்கத்தின் குடும்பத்தாருக்கு பாடசாலைச் சமூகம் சார்பாகவும் , பழைய மாணவர் சார்பாகவும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.



Wednesday, 13 June 2012

மகாண மட்ட தமிழறிவு வினாவிடைப்போட்டியில் எமது பாடசாலை மாணவிகள் முதலாம் இடம்


மகாண மட்ட தமிழறிவு வினாவிடைப்போட்டியில் எமது பாடசாலை மாணவிகள் முதலாம் இடத்தைப் பெற்று தேசிய மட்டத்திற்குத் தெரிவாகியுள்ளனர்.எமது பாடசாலையிலிருந்து குறித்த போட்டியில் பங்குபற்றிய உயர்தர மாணவிகளான செல்வி பா.துஸ்யந்தினி. செல்வி பா.சுஜிந்தா. செல்வி ந.மந்தாகினி . செல்வி கி.றஜிதா செல்வி ஜே.நிலோஜினி ஆகியோராலேயே இச் சாதனை மேற்கோள்ளப்பட்டது. சாதனை புரிந்த மாணவிகளுக்கும் , வழிகாட்டிய ஆசிரியர்களுக்கும் நல் வாழ்த்துக்கள்.

தெரிவுசெய்யப்பட்ட மாணவிகள் அதற்கு வழிப்படுத்திய ஆசிரியர்கள் சகிதம் படத்தில் காணப்படுகின்றனர்.

இடமிருந்து வலம்(இருப்பவர்கள்)
ஆசிரியர் சு.முரளீதரன் ஆசிரியர் சி.பத்மராசா அதிபர் செ.அல்பிரட் உப அதிபர் சி.மோகஜீவன் ஆசிரியை திருமதி யே.மேரிசுசி

இடமிருந்து வலம் (நிற்பவர்கள்;)
மாணவிகளான செல்வி பா.துஸ்யந்தினி. செல்வி பா.சுஜிந்தா. செல்வி ந.மந்தாகினி . செல்வி கி.றஜிதா செல்வி ஜே.நிலோஜினி

Friday, 27 April 2012

பாடசாலைக்கான புதிய கட்டட ஆரம்ப விழாவும்: நிதி வழங்குனர் வரவேற்பும்


எமது பாடசாலைக்கான புதிய கட்டட ஆரம்ப விழா அண்மையில் நடைபெற்றது. இதற்கான நிதியினை அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த ரயல் என்பவரால் வழங்கப்பட்டது. இந்நிதி யுனிசெவ் ஊடாக வழங்கப்படுகிறது. கட்டடங்கட்டும் பணிகள் ஆரம்பமான நிலையில் நிதியை வழங்குகின்ற ரயல் என்பவரின் மகளான செல்வி குளோடியா எமது பாடசாலைக்கு வருகை தந்து பார்வையிட்டார். அவருக்கு எமது பாடசாலை வளாகத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.



Friday, 6 April 2012

பரிசளிப்பு விழாவும் ''முல்லை முகி'' புத்தக வெளியீடும்


20.03.2012 புதன்கிழமை எமது பாடசாலையில் பரிசளிப்பு விழாவும் '' முல்லை முகி '' புத்தக வெளியீடும் அதிபர் திரு.செ.அல்பிறட் தலைமையில் நடைபெற்றது. பிரதம விருந்தினராக எமது பாடசாலையின் பழைய மாணவனும் களனிப்பல்கலைக்கழக பேராசிரியருமாகிய ஸ்.யோ.யோகராஜா அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார். சிறப்பு விருந்தினராக எமது வலயக் கல்விப்பணிப்பாளர் திரு கோ.வரதராஜமுர்த்தி கலந்து சிறப்பித்தார். கௌரவ விருந்தினர்களாக திரு மா.இராஜகுமார் (பிரதிக்கல்விப்பணிப்பாளர்-கல்விநிர்வாகம்) .திருமதி உ.முனீஸ்வரன் (கல்வி அபிவிருத்தி) திரு.சி.ராஜா(கல்வி முகாமைத்துவம்) திரு.ந.ரங்கநாதன் (மாணவர் அபிவிருத்தி) கலந்து சிறப்பித்தனர்.
அத்துடன் மேலும் பல கல்வி அதிகாரிகள், அயல் பாடசாலை அதிபர்கள் , பெற்றோர்கள், பழையமாணவர்கள்-நலன்விரும்பிகள், பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
(எமது பாடசாலையிலிருந்து தெரிவாகி பல்கலைக்கழகம் தேசிய கல்வியற் கல்லுரி மற்றும் தாதியா பயிற்சிக்கல்லுரிகளில் பயிலும் மாணவர்கள்  பரிசளிப்பு விழாவிற்கு அழைக்கப்பட்டுக் கௌரவிக்கப்பட்டனர்.)





                                                                                                                                      

Thursday, 29 March 2012

பாடசாலை இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி நிகழ்வுகள் 2012

இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி பாடசாலை அதிபர் திரு.செ.அல்பிறட் தலைமையில் நடைபெற்றது.பிரதம விருந்தினராக முல்லை மாவட்ட அரச அதிபர் திரு. வேதநாயகன் கலந்து கொண்டு சிறப்பித்தார். சிறப்பு விருந்தினராக வலயக்கல்விப்பணிப்பாளர் திரு கோ.வரதராஜமுர்த்தி கலந்து கொண்டு சிறப்பித்தார். நிகழ்வு சிறப்புற நடைபெற்றது. 




அமரர் திரு பேபிசிங்கத்தின் ஞாபகார்த்த பரிசுப் போட்டியில் வெற்றியீட்டியோர் (படங்கள்)

எமது பாடசாலையில் கல்விகற்ற பழைய மாணவரான அமரர் திரு பேபிசிங்கத்தின் ஞாபகமாக அவரது உறவுகளால் வருடம் தோறும் நடாத்தப்படும் போட்டியில் பரிசில்களைப் பெற்ற மாணவர்களுக்கு உப அதிபர் திரு மோகனஜீவன் அவர்களால் பரிசில்கள் வழங்கிவைக்கப்படுகின்றன. வருடாந்தம் இப் போட்டியை நடாத்தி மாணவர்களை ஊக்கப்படுத்தும் அமரர் திரு பேபிசிங்கத்தின் குடும்பத்தாருக்கு பாடசாலைச் சமூகம் சார்பாகவும் , பழைய மாணவர் சார்பாகவும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.


Thursday, 29 December 2011

06.12.2011 அன்று பாடசாலையில் நடைபெற்ற ஒளிவிழா நிகழ்வுகள்.

வருடாந்தம் சிறப்பாக நடைபெறும் முல்லைத்தீவு மகாவித்தியாலய ஒளிவிழா நிகழ்வுகள் கலை நிகழ்ச்சிகளுடன் 06.12.2011 அன்று பாடசாலை அதிபர் திரு ம.அல்பிரட் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.  சமய நிகழ்வுகள், கலை நிகழ்ச்சிகளில் ஆசிரியர்கள், மாணவர்களுடன் பெற்றார்களும் கலந்து சிறப்பித்தனர்.

இணைந்தமைக்கு நன்றிகள்.மீண்டும் வருக